Publish Date: Fri, 28 Oct 2022 (11:21 IST)
Updated Date: Fri, 28 Oct 2022 (11:24 IST)
ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி' : பாஜக எம்.எல்.ஏ வெளியிட்ட புகைப்படம்
ரூபாய் நோட்டில் தற்போது மகாத்மா காந்தியின் புகைப்படம் மட்டுமே இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பலரும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்
ரூபாய் நோட்டில் லட்சுமி மட்டும் விநாயகர் புகைப்படம் இருக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய நிலையில் ரூபாய் நோட்டில் அம்பேத்கார் புகைப்படம் இருக்க வேண்டும் என்றும், ரூபாய் நோட்டில் பிரதமர் மோடி புகைப்படம் இருக்க வேண்டும் என்றும், ரூபாய் நோட்டில் சர்தார் வல்லபாய் படேல் புகைப்படம் இருக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில எம்எல்ஏ நிதிஷ் ரனே என்பவர் இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எங்கே போய் முடியுமோ என்று பொதுமக்கள் கவலை கொள்கின்றனர்.