Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதி சொல்லியும் அடங்கல.. அடுத்த நாளே வேலையை காட்டிய விஜே பாரு! Biggboss season 9

Advertiesment
VJ Paaru kani fight

Prasanth K

, திங்கள், 27 அக்டோபர் 2025 (09:36 IST)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9-ல் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து வரும் நிலையில் விஜய் சேதுபதி சொல்லியும் கேட்காமல் அடுத்த நாளே பிரச்சினை தொடங்கியுள்ளது.

 

கடந்த வாரம் ஜூஸ் டாஸ்க்கின் போது விக்கல்ஸ், வினோத் என பலரும் அதை ஜாலியாகவும், பொழுதுபோக்காகவும் கொண்டு செல்ல முயன்ற நிலையில் விஜே பார்வதி குவாலிட்டி ஆபிசராக வந்து எரிச்சலூட்டினார். அவரது செயலால் மற்றவர்களும் ஆத்திரமடைய அந்த டாஸ்க்கே போர்க் களமானது. இந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய விஜய் சேதுபதி அவர்களது வன்முறையான நடத்தை, விளையாட்டை சரியாக புரிந்துக் கொள்ளாமல் விளையாடுவது போன்றவற்றை கண்டித்தார்.

 

இந்த வாரம் விஜய் சேதுபதியிடம் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் பேசிக் கொண்டிருக்க பாரு விளையாட்டு போல செய்துக் கொண்டிருந்த செயல்கள் விஜய் சேதுபதியையே கடுப்பாக்க அவர் நேரடியாக கண்டித்தபோது, ‘நீங்க பிக்பாஸ் ரூல்ஸையும் மதிக்க மாட்றீங்க.. மத்த ஹவுஸ்மேட்ஸையும் மதிக்க மாட்றீங்க” என நேரடியாகவே கண்டித்தார்.

 

ஆனாலும் பாரு தொடர்ந்து தனது தவறை உணராமல் அதையே செய்துக் கொண்டிருக்கிறார். மொத்த வீடும் தனக்கு எதிராக செயல்படுவதாக அவரே நினைத்துக் கொண்டு எல்லாரிடமும் வம்பு இழுப்பதையே முழு நேர வேலையாக செய்கிறார். இன்றைய ப்ரோமோவில் பிக்பாஸ் ஹவுஸில் உள்ள பாருவை தனது ஆடைகளை எடுத்து வைக்குமாறு கனி கேட்க அதை வாசலிலேயே பாரு வைத்துவிட்டு சென்றதால் மீண்டும் பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. மீண்டும் ஆட்டத்தை புரிந்துக் கொள்ளாத பாரு, எல்லாரும் என்னை கார்னர் பண்றாங்க என கிளம்பி விட்டார். வாரம்தோறும் தவறாமல் இது மட்டுமே நடந்துக் கொண்டிருப்பது ஆடியன்ஸை அயற்சிக்கு உள்ளாக்குகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்து சயின்ஸ் பிக்‌ஷன் படம்… மீண்டும் இயக்குனர் ஆகும் ப்ரதீப்!