தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகப் ப்ரதீப் அடைந்திருக்கும் வளர்ச்சி அளப்பரியது. அவர் நடித்த முதல் மூன்று படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன. இது மற்ற எந்த நடிகர்களுக்கும் அமையாத ஒரு தொடக்கமாகவுள்ளது.
ப்ரதீப், மமிதா பைஜு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கினார்.
ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி ரூபாய் என்றும் போட்டதை விட இரு மடங்கு இலாபத்தை இந்த படம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ப்ரதீப் நடித்துள்ள LIK படம் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதையடுத்து மீண்டும் தானே ஒரு படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக ப்ரதீப் தெரிவித்துள்ளார். அறிவியல் புனைகதையாக உருவாகும் அந்த படம் கணிக்க முடியாதபடி இருக்கும் எனக் கூறியுள்ளார்.