நம் முதல் பெண் சூப்பர் ஹீரோ… லோகா படத்தை சிலாகித்த சமந்தா!

vinoth
திங்கள், 8 செப்டம்பர் 2025 (14:27 IST)
துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  படம்  இரண்டாம் வார முடிவில் உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த சமந்தா பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில் “விஷ்வல், ஒலி வடிவமைப்பு, ஆக்‌ஷன் என அனைத்தும் வியப்பில் ஆழ்த்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் முதல் பெண் சூப்பர் ஹீரோவைப் பார்த்ததுதான் என மனதில் இப்போதும் நிறைந்திருக்கிறது.  சந்திரா கொடுத்த கூஸ்பம்ப்ஸ் நீண்ட நாட்களுக்கு என் மனதில் நிலைத்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments