துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படம் மோகன்லாலின் ஹ்ருத்யபூர்வம் திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் இரண்டாம் வார முடிவில் உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் ஆர்வத்தைக் காட்டுகின்றனர். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த படத்துக்கு 365 நள்ளிரவுக் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனனுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.