நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. ஒரு முழம் மல்லிகைப்பூ காரணமா?

Mahendran
திங்கள், 8 செப்டம்பர் 2025 (13:57 IST)
ஓணம் பண்டிகையை கொண்டாட ஆஸ்திரேலியா சென்ற பிரபல நடிகை நவ்யா நாயர், தனது கைப்பையில் இருந்த ஒரு முழம் மல்லிகை பூவுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விக்டோரியாவில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்க நவ்யா நாயர் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, அவரது கைப்பையை சோதனை செய்த அதிகாரிகள், அதில் இருந்த ஒரு முழம் மல்லிகை பூவுக்காக ரூ.1.14 லட்சம் அபராதம் விதித்தனர்.
 
இது குறித்து நவ்யா நாயர் பேசும்போது, "என் அப்பா எனக்கு அன்புடன் அளித்த மல்லிகை பூவை தலையில் வைத்துக்கொண்டும், மீதியை பையிலும் எடுத்து வந்தேன். ஆனால், ஆஸ்திரேலியாவின் சட்டங்களுக்கு எதிராக நான் செயல்பட்டது தவறுதான். அறியாமையால் செய்த தவறை மன்னிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்" என தெரிவித்தார்.
 
ஆஸ்திரேலியா, வெளிநாடுகளில் இருந்து வரும் தாவரங்கள், விதைகள், பூக்கள், பழங்கள், காய்கறிகள், மண் மற்றும் விலங்குகள் சார்ந்த பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments