இம்மாத தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார். சுந்தர் சி விலகலுக்கு அவர் சொன்ன கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் வேறு இயக்குனர்களிடம் தற்போது கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை ரஜினியை சந்தித்து கார்த்திக் சுப்பராஜ், நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், விவேக் ஆத்ரேயா உள்ளிட்ட பல இளம் இயக்குனர்கள் சந்தித்துக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சில இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லியுள்ள நிலையில் அந்த லிஸ்ட்டில் தற்போது வரை 8 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதில் எந்தக் கதையைப் பண்ணலாம் என்பதை ரஜினியும் கமலும் விவாதித்து முடிவெடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.