இயக்குநர் ராஜேஷ் எம், நடிகர் ஜீவாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம், அவர்களின் கூட்டணியில் வெளியான வெற்றிப் படமான 'சிவா மனசுல சக்தி'யின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று முதலில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், தற்போது இது முற்றிலும் புதிய கதை என்றும், இதில் நடிகர் சந்தானம் நடிக்கவில்லை என்றும் உறுதியாகியுள்ளது.
சந்தானம் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதனால், நகைச்சுவை பாத்திரங்களுக்கு அவர் அதிக சம்பளம் கேட்பது அல்லது படநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற காரணங்களால் இந்த புதிய படத்தில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ஜீவா நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இரண்டு பாடல்களை ஏற்கனவே முடித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், குறுகிய காலத்தில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜேஷ் எம் மற்றும் ஜீவா ஆகிய இருவருக்குமே ஒரு வெற்றிப்படம் கண்டிப்பாக தேவைப்படுவதால் இந்த படம் இருவருக்கும் திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.