இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான பார்வையாளர்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நெட்பிளிக்ஸ் தொடர்தான் அடோலசன்ஸ். இங்கிலாந்தைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர் சக பள்ளி மாணவியைக் கொலை செய்த சிறுவன் மற்றும் அவனின் குடும்பத்தாரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
இந்த தொடரின் ஒவ்வொரு எபிசோட்களும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டவை. வெளியான உடனேயே உலகளவில் ஹிட்டான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட சீரிஸ்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் சீரியல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான எம்மி விருதுகளில் இந்த தொடரில் நடித்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பருக்கு சிறந்த துணை நடிகர் வழங்கப்பட்டுள்ளது.
தொடரில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஓவன் மிகக் குறைந்த வயதில் எம்மி விருது பெறும் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.