பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஜமௌலி. பாகுபலிக்கு முன் அவர் நான் ஈ, மகதீரா போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் ராஜமௌலியை பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்தது. அந்த இரண்டு படங்களின் மெகா வெற்றி ராஜமௌலியை இந்தியாவின் முக்கிய இயக்குனராகவும் மாற்றியது.
அந்தப் படத்திற்கு பின் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ஆர்.ஆர்.ஆர் என்கிற படத்தை இயக்கினார். இந்த படமும் அசத்தலான வெற்றியை பெற்றது. கடந்த 10 வருடங்களில் 4800 கோடி வசூல் செய்து கொடுத்த ஒரே இந்து இயக்குனர் என்கிற பெருமையை ராஜமௌலி தட்டி தூக்கி இருக்கிறார். தற்போது அவர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. எனவே SSMP29 என அழைத்து வருகிறார்கள். அதேநேரம் இந்த படத்திற்கு வாரணாசி என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. வருகிற 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கொம்பா என்கின்ற இடத்தில் பிரித்திவிராஜ் நடித்திருக்கிறார். அவரின் போஸ்டரே டெரராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.