Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

Advertiesment
SSMB29

Bala

, சனி, 15 நவம்பர் 2025 (20:10 IST)
தெலுங்கில் ஏற்கனவே சில படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் ராஜமௌலியை இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது, இந்த இரண்டு படங்களும் தெலுங்கில் உருவாகியிருந்தாலும் தமிழ் மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. அதிலும் பாகுபலி 2 திரைப்படம் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
ஒரு திரைப்படத்தை ஒரு மொழியில் உருவாக்கி பல மொழிகளும் டப் செய்து வெளியிட்டு பல நூறு கோடி வசூலை அள்ளும் ஃபேன் இந்தியா கான்செப்ட் துவக்கி வைத்தது ராஜமௌலிதான். அதன்பின் பல படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்தது. பாகுபலி2-வுக்கு பின் ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து RRR என்கிற படத்தை ராஜமவுலி இயக்கினார். அந்த படமும் பேன் இந்தியா படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
 
 
தற்போது மகேஷ்பாபு வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிரித்திவிராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வாரணாசி என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று நடந்த விழாவில் அறிவித்திருக்கிறார்கள்.
webdunia
 
வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஜியோ ஸ்டாருக்கு கொடுத்துவிட்டனர். இன்று மாலை 7 மணி முதல் இந்த நிகழ்ச்சிகளையும் ஜியோ ஹாட் ஸ்டாரில் லைவ்வாக பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்