Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியிடம் ஆசி பெற்ற புகழ்-பென்சியா!

Advertiesment
pughaz bensiya vadivel balaji
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:28 IST)
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியிடம் ஆசி பெற்ற புகழ்-பென்சியா!
விஜய் டிவியில் பிரபலமான மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி இடம் ஆசி வாங்கிய புகழ்-பென்சியா தம்பதிகள் குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ், சமீபத்தில் தனது காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த  புகழ்-பென்சியா ஆகிய இருவரும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன் நின்று அவரை வணங்கினார்கள்
 
மேலும் இதுகுறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களுக்கு மகனாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக பதிவு செய்து உள்ளார். அவர் இது குறித்து பதிவு செய்திருப்பதாவது: 
 
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா... என்று பதிவு செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனை அடுத்து மம்முட்டி படத்தில் இணைந்த ஏஜண்ட் டீனா வசந்தி!