Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

ஹீரோவாகும் ‘அரபிக்குத்து’ புகழ் ஜானி மாஸ்டர்…. வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்!

Advertiesment
ஜானி மாஸ்டர்
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:34 IST)
தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபல நடன இயக்குனராக வளர்ந்து வருபவர் ஜானி மாஸ்டர்.

தென்னிந்தியாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் நடன இயக்குனர்களில் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர் நடனம் வடிவமைத்த புட்ட பொம்மா மற்றும் அரபிக்குத்து பொன்ற பாடல்கள் வைரல் ஹிட்டாகின. அதுமட்டுமில்லாமல் அந்த பாடல்களின் ரீல்ஸ்களால் சமூகவலைதளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இப்போது அவரே ஹீரோவாக அரிதாரம் பூசவுள்ளார்.

இவர் ஹீரோவாக நடிக்கும் யத ரஜா தாதா பிரஜா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சினிமா பண்டி என்ற படத்தை இயக்கி கவனம் பெற்ற ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். படத்தின் தொடக்க நிகழ்ச்சி சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட இந்தியாவில் நடக்கும் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்!