Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைதி 2 ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் தெரிவித்த தகவல்!

Advertiesment
கைதி

vinoth

, செவ்வாய், 3 ஜூன் 2025 (07:25 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கைதி 2 பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். அதில் “கைதி 2 படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் ஒரு மாதத்துக்கு முன்பாக தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.” எனக் கூறியுள்ளார்.  தற்போது லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளிலும், கார்த்தி சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் ஆகிய படங்களிலும் பிஸியாக உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!