Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

Advertiesment
மகாராஜா

vinoth

, திங்கள், 2 ஜூன் 2025 (08:28 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நித்திலனை ‘பேர்ட்மேன்’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதை எழுத்தாளரும் ஆஸ்கர் விருது வென்றவருமான அலெக்சாண்டார் டெனலேரிஸ் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும் அவரின் ஆஸ்கர் விருதைக் கையில் பிடித்து நித்திலன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!