Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 கோடி ரூபாய் படம் இயக்க… அதெல்லாம் எனக்குப் பிடிக்காது –இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பதில்!

Advertiesment
சூர்யா

vinoth

, வெள்ளி, 30 மே 2025 (09:54 IST)
தமிழ் சினிமாவில் குறும்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது முன்னணிக் கமர்ஷியல் இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படம் ஒட்டுமொத்தமாக 235 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வியாபாரம் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து தன்னுடைய அடுத்த படம் ஒரு சுயாதீனப் படமாக இருக்கும் என்றும் அதை விருது விழாக்களுக்கு அனுப்பும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கமர்ஷியல் இயக்குனர்களின் கனவாக இருக்கும் 1000 கோடி ரூபாய் வசூல் படம் எடுப்பது குறித்து பேசும் போது “1000 கோடி ரூபாய் படம் எடுக்கவேண்டும் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் போன்றவை தேவைப்படும். அதற்காக க்ரீன் மேட்டில் பலக் காட்சிகளைப் படமாக்க வேண்டும். எனக்கு அது பிடிக்காது. உண்மையான செட்களில் படமாக்கவே நான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் மோத வேண்டாம்.. எஸ்கே கெஞ்சியும் கேட்காத பராசக்தி குழு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனை..!