எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் தற்போது தலைவன் தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். இதுவரை வெளியான முன்னோட்டம் மற்றும் முதல் தனிப்பாடல் ஆகியவை கவனத்தை ஈர்த்துள்ளன. படம் ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இதையொட்டி நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் “குடும்பப் படம் எடுப்பது ரொம்ப கஷ்டமானது. ஏனென்றால் கொஞ்சம் பிசகினால் சீரியல் மாதிரி இருக்கு. கிரிஞ்சாக இருக்கு என சொல்லிவிடுவார்கள். அது உண்மைதான். என்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோரும் குடும்பக் கதைதான் கேட்கிறார்கள். கடைகுட்டி சிங்கம் ஓடியதும் சிவகார்த்திகேயன் அது போல ஒரு படம் வேண்டும் என்றார். அப்படிதான் நம்ம வீட்டுப்பிள்ளை உருவானது. தலைவன் தலைவி ஓடினால் அடுத்து வரும் ஹீரோக்கள் அதே போன்ற கதை வேண்டுமென்று கேட்பார்கள்” எனக் கூறியுள்ளார்.