தமிழ் சினிமாவில் ஓரம்போ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஜோடி புஷ்கர்- காயத்ரி. ஆனால் அவர்களுக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் அவர்கள் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம்தான்.
இந்த படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அதையடுத்து அந்த படத்தை இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோரை வைத்து இயக்கினர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு அவர்கள் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. தமிழில் சில வெப் சீரிஸ்களைத் தயாரித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர்கள் தங்கள் அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.