தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் தாத்தா, அப்பா மற்றும் இரு மகன்கள் என நான்கு வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஐந்து முன்னணிக் கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை வில்லனாக நடிக்கவைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அண்மையில் அட்லி இன்ஸ்டாகிராம் தளத்தில் பாண்ட்யாவைப் பின்தொடர ஆரம்பித்த நிலையில் இந்த தகவல் பரவ ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.