ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'படையப்பா' திரைப்படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி, வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை செய்தது.
குறிப்பாக, நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில், ரஜினியின் 50-வது ஆண்டு திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் வகையில், 'படையப்பா' திரைப்படம் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் 'ஜெயிலர் 2' படத்தின் அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு 'படையப்பா' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவதால், இன்றைய இளைய தலைமுறையினர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கும் புதிய அனுபவத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.