நடிகர் மற்றும் கார் ரேஸரான அஜித்குமார், மலேசியாவில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்று, 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச களத்துக்கு திரும்பிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
"நான் கடைசியாக இங்கு 2003-ஆம் ஆண்டு ஃபார்முலா பி.எம்.டபிள்யூ பந்தயத்தில் கலந்து கொண்டேன். இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சினிமாவுக்கும் ரேஸிங்குக்கும் உள்ள வேறுபாட்டை பிரித்து பார்க்க உதவிய தனது பயிற்சியாளர்களுக்கும், இந்திய ரேஸிங் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அங்கு வந்திருந்த ரசிகர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
சினிமா, ரேஸிங் என இரண்டிலும் தான் செலுத்தும் கடின உழைப்பின் அடையாளமாக இந்த பயணத்தைக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பந்தயத்துக்கு பின் வெளியான அவரது புகைப்படங்கள், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.