Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

vinoth
திங்கள், 31 மார்ச் 2025 (11:43 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக தற்போதிருக்கும் பா.ரஞ்சித் 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை  இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் ஆர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில் இப்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments