Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

vinoth
திங்கள், 31 மார்ச் 2025 (11:36 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்த படத்தில் முக்கியமான ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம். முதலில் ஆர்வம் காட்டிய வடிவேலு, தற்போது அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments