Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

Advertiesment
Flight

Siva

, சனி, 22 மார்ச் 2025 (09:27 IST)
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக அமெரிக்காவிலிருந்து 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட இருப்பதாகவும், விரைவில் அந்த விமானம் இந்தியா திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதுடன், அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். கடந்த பிப்ரவரி மாதம் முதல், அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் மூன்று கட்டமாக நாடு கடத்தப்பட்டனர். அவர்களுக்கு கை, கால் விலங்கிடப்பட்டு இருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 40 சதவீதம் பஞ்சாப் மற்றும் 34 சதவீதம் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் அனைத்தும் பஞ்சாபில் தான் தரையிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 295 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த செய்தி தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!