ஹரியானாவில் வாடகைக்கு குடியிருந்த நபர் தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப். திருமணமான இவர் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்த நிலையில் அதில் ஜக்தீப் என்ற யோகா ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
ஜக்தீப் அடிக்கடி ஹர்தீப்பின் மனைவியோடு பேசி வந்த நிலையில் இரண்டு பேருக்கும் இடையே ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்தது ஹர்தீப்க்கு தெரிய வந்த நிலையில், அவர் ஜக்தீப்பை கொலை செய்வது என்று முடிவு செய்துள்ளார்.
இதற்காக தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து திட்டம் போட்ட ஹர்தீப், யோகா ஆசிரியரை கடத்திச் சென்று தனது வீட்டின் அருகே வெட்டப்பட்டிருந்த 7 அடி ஆழ குழியில் போட்டு உயிருடன் புதைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து ஜக்தீபை காணவில்லை என அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹர்தீப் முன்னுக்கு பின்னாக உளறவே போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஹர்தீப் ஒத்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஹர்தீப் அவரது நண்பர் இருவரையும் கைது செய்துள்ளதுடன், புதைக்கப்பட்ட ஜக்தீப் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
Edit by Prasanth.K