நயன்தாரா நடிப்பில் அடுத்த படமாக வெளியாக உள்ளது O2 திரைப்படம்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்த டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள O2 என்ற திரைப்படம் ஓடும் இந்த படதின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” என சொல்லப்பட்டது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இதையடுத்து இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான சுவாசமே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.