Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் ராம் படம் பற்றி அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

இயக்குனர் ராம் படம் பற்றி அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
, புதன், 25 மே 2022 (11:42 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி உள்ளிட்டவர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்தில் ரயில் செட்டுக்குள் நடந்த காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தற்போது படக்குழுவினரோடு ஸ்டண்ட் இயக்குனர் ‘ஸ்டண்ட்’ சில்வா இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் முதல் முதலாக முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இதை இயக்கி வருவதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அது சம்மந்தமாக “குறையில்லாத நடிப்பை நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோர் வழங்கியுள்ளனர். மற்றொரு சர்ப்ரைஸ் நடிகரும். கண்டிப்பாக இந்த படம் இயக்குனர் ராமின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் சர்தார் பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!