Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரகத நாணயம் இயக்குனரோடு கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி… வெளியான டைட்டில்!

மரகத நாணயம் இயக்குனரோடு கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி… வெளியான டைட்டில்!
, புதன், 25 மே 2022 (16:19 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் அன்பறிவு.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துல்கர் சல்மான் நடிக்கும் ‘சீதா ராமம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!