என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

Mahendran
செவ்வாய், 18 நவம்பர் 2025 (17:34 IST)
மராத்திய திரையுலகின் நடிகையான கிரிஜா ஓக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் படங்களால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
கிரிஜா ஓக், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படம் உள்பட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:
 
"நான் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறேன், சமூக வலைதளங்கள் எப்படி இயங்குகின்றன என்பது எனக்கு தெரியும். என்னை வைத்து மார்பிங்  புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. 
 
எனக்கு 12 வயதில் மகன் இருக்கிறான். அவன் தற்போது சமூக வலைதளத்தில் இல்லை. வருங்காலத்தில் பயன்படுத்துவான். இப்போது சுற்றும் புகைப்படங்கள் அப்போதும் இருக்கும். ஒரு அம்மாவின் போலியான புகைப்படங்களை அவனும் ஒருநாள் பார்ப்பான் என்பது எனக்கு தெரியும். இது போன்ற கேவலமான செயல்களை விளையாட்டிற்காக கூட செய்வது பயமுறுத்தும் வகையில் இருக்கிறது."
 
AI உதவியுடன் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒருமுறைக்கு இரண்டுமுறை சிந்திக்க வேண்டும் என்றும், அவர்களின் வேடிக்கையான செயலால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிரிஜா ஓக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

‘வாரணாசி’ படவிழாவில் சர்ச்சை பேச்சு.. இயக்குனர் ராஜமெளலி மீது வழக்குப்பதிவு..!

எங்கள யாருனு நினைச்சீங்க? மைதானத்தில் ஆட்டம் காண வைத்த அஜித் மகன் மற்றும் SK மகள்

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments