Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜாசாப் படத்தில் நிச்சயமாக ‘அது’ இருக்கும்… ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா!

Advertiesment
பிரபாஸ்

vinoth

, வெள்ளி, 20 ஜூன் 2025 (11:04 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாததால் ரிலிஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் டீசர் ரிலீஸாகிக் கவனம் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள மாளவிகா மோகனன் படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் “நீங்களும் பிரபாஸும் நடனமாடும் மாஸ் ஆன பாடல் ஒன்றை படத்தில் எதிர்பார்க்கலாமா?” எனக் கேட்டிருந்தார். அவருக்கு “நிச்சயமாக” என பதிலளித்துள்ளார் மாளவிகா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆண்டின் உண்மையான பிளாக்பஸ்டர்… 50 நாட்களை நிறைவு செய்த ‘டூரிஸ்ட் பேமிலி’!