Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!

Advertiesment
பிரபாஸ்

vinoth

, சனி, 14 ஜூன் 2025 (09:03 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் படமாக ராஜாசாப் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாததால் ரிலிஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

ஜூன் 16 ஆம் தேதி இந்த படத்தின் டீசரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் படத்தில் இருந்து 20 வினாடிக் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழு ’இணையத்தில் கசிந்த காட்சிகளை யாரும் பரப்பக் கூடாது. அதைப் பகிரும் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்துவைக் கேள்வி கேட்கும் கங்கை அமரன் SPB சரண் விஷயத்தில் அமைதியாக இருந்தது ஏன்?- நெட்டிசன்ஸ் கேள்வி!