Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பின்னர் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பாண்டிராஜ் கூட்டணி…!

Advertiesment
விஜய் சேதுபதி

vinoth

, வியாழன், 29 மே 2025 (13:22 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

அதையடுத்து பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘தலைவன் தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வீடியோ சமீபத்தில் ரிலீசானது. அந்த டீசர் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் ஒரு படத்துக்காக இணையவுள்ளது. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

96 படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதீப்பா?... நாளுக்கு நாள் பொய்ச் செய்திகள் அதிகமாகின்றன – இயக்குனர் பிரேம்குமார் ஆதங்கம்!