Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன்பே ரன்னிங் டைம்-ஐக் குறைக்கிறதா ‘குபேரா’ படக்குழு!

vinoth
சனி, 14 ஜூன் 2025 (08:36 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து முடித்துள்ளார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு அதற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 3 மணிநேரம் 15 நிமிடம் ஓடுமளவுக்கு வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சமீபகாலமாக நீண்ட நேரம் ஓடும் படங்கள் ரசிகர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கின்றன. அதனால் குபேரா படத்தின் நீளம் ஒரு விவாதப் பொருளானது. இந்நிலையில் படத்தில் இருந்து 25 நிமிடங்கள் கத்தரிக்கப்பட்டு தற்போது 2.50 மணி நேரம் ஓடும் மற்றொரு வெர்ஷன் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே ரன்னிங் டைம்-ஐக் குறைக்கிறதா ‘குபேரா’ படக்குழு!

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments