தனுஷ் நடித்துள்ள அவரின் நேரடி இரண்டாவது தெலுங்குப் படமான குபேரா படத்தை சேகர் கமுலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸானது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாகார்ஜுனா, நடிகை ராஷ்மிகா மந்தனாவை வானளாவப் புகழ்ந்துள்ளார்.
அதில் “திறமையின் பவர்ஹவுஸ் என்றால் அது ராஷ்மிகாதான். கடந்த சில ஆண்டுகளில் வெளியான அவரது படங்களைப் பாருங்கள். நம்மில் யாரிடமும் 2000 கோடி, 3000 கோடி ரூபாய் வசூல் படங்கள் இல்லை. ஆனால் ராஷ்மிகா நம் அனைவரையும் தாண்டி நிற்கிறார்.” எனப் பாராட்டிய்ள்ளார். ராஷ்மிகா நடித்த புஷ்பா 2 மற்றும் அனிமல் ஆகிய படங்கள் மொத்தமாக 2800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.