Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

Advertiesment
நெல்சன் வெங்கடேசன்

vinoth

, புதன், 11 ஜூன் 2025 (14:08 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்போது அதர்வா மற்றும் நிமிஷாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் பல தாமதங்களுக்குப் பிறகு தற்போது ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதையடுத்து படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது. DNA பிரச்சனையுள்ள கதாநாயகிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறக்க, அந்த குழந்தைக் காணாமல் போக அதுசம்மந்தமாக ஏற்படும் பிரச்சனைகளும் அதையொட்டி எழும் பிரச்சனைகளுமேக் கதை என்று டிரைலர் காட்டுகிறது. நீண்ட காலமாக ஒரு வெற்றிப் படத்துக்காகக் காத்திருக்கும் அதர்வாவுக்கு இந்த படமாவது ஒரு கம்பேக்காக அமையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!