Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

Advertiesment
தனுஷ்

vinoth

, வெள்ளி, 13 ஜூன் 2025 (10:04 IST)
தனுஷ் நடித்துள்ள அவரின் நேரடி இரண்டாவது தெலுங்குப் படமான குபேரா படத்தை சேகர் கமுலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து இன்று ‘குபேரா’ படத்தின் டிரைலர் வெளியாகிறது. படம் ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் படக்குழு சென்று ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!