மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

Siva
வெள்ளி, 13 ஜூன் 2025 (20:34 IST)
பிரபல நடிகை ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி, திரையுலகில் கால் பதிக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 
 
கமல்ஹாசன் போன்ற பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ஊர்வசி, 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றிப் படங்களில் நாயகியாக ஜொலித்தார், குறிப்பாக 'மைக்கேல் மதன காமராஜன்' போன்ற படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
 
தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஊர்வசி, தன் மகள் தேஜா லட்சுமியை மலையாளத் திரையுலகில் நாயகியாக அறிமுகம் செய்யவுள்ளார்.
 
 'சுந்தரி அவள் ஸ்டெல்லா' எனும் பெயரில் உருவாகும் படத்தில்தான் தேஜா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மகளின் இந்த முடிவுக்கு, ஊர்வசியின் முதல் கணவரும் சம்மதம் தெரிவித்ததாகவும், மகள் தன் தந்தையிடம் ஆசி பெற்று வருமாறு ஊர்வசி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments