பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

Bala
வெள்ளி, 14 நவம்பர் 2025 (19:31 IST)
நேற்று ஒரே நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் சுந்தர் சி. ரஜினி 173 படத்தில் இருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லாருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி அவருடைய 173வது படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை யார் இயக்க போகிறார் என்ற ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்டாக சுந்தர் சி பெயர் உள்ளே வந்தது.

 
அறிவிப்பு வெளியாகி ஒரே வாரத்தில் சுந்தர் சி இந்தப் படத்திலிருந்து விலகுகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது ரஜினிக்கும் கமலுக்குமே தெரியாதாம். கோபத்தில் எடுத்த முடிவுதான் என்றும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். அதாவது கமல் ஒரு ஒன்லைனை சொல்லி டெவலெப் செய்யுமாறு சுந்தர் சியிடம் கூறியதாகவும் ஒவ்வொரு முறையும் கமல் அதில் திருத்தம் செய்ததாகவும் அதனால் எரிச்சலில்தான் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி சொன்னதாகவும் கூறப்படுகிறது.
 
இன்னொரு பக்கம் இது சுந்தர் சி கதைதான், ஆனால் ரஜினியை திருப்திபடுத்த முடியவில்லை. கடைசியில் ரஜினிக்கு இதன் முழுக்கதை பிடிக்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. இதற்கிடையில் எந்த சோசியல் மீடியாக்களிலும் இல்லாத சுந்தர் சி தனது மனைவி குஷ்புவின் அக்கவுண்டலிருந்துதான் அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
 
வெளியான இரண்டு நிமிடங்களில் அந்த பதிவும் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு காரணம் கமல்தானாம். இந்த செய்தி கமல் காதுக்கு போயிருக்கிறது. அப்போது கமல் டெல்லியில் இருந்தாராம். உடனே குஷ்புவை அழைத்து உடனடியாக அந்த பதிவை அழிக்குமாறு கமல் கூறினாராம். மீதி சென்னை வந்த பிறகு பேசி கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் இவ்வளவு நடந்த பிறகு சுந்தர் சியிடம் மறு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. அதனால் அடுத்த இயக்குனர் யார் என்ற விவாதத்திற்குதான் கமல் ரஜினி போவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments