சமீபகாலமாக ரஜினி வெறும் ஆக்ஷன் படங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலானப் படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது அவர் இல்லை டூப்தான் என்று தெரிந்தாலும் ரசிகர்கள் தங்கள் தலைவருக்காக விசிலடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இரத்தமாகப் பார்த்து பூத்துப் போனக் கண்களுக்கு சிறு ஆறுதலாக ரஜினி அடுத்து சுந்தர் சி யோடு இணைந்து பணியாற்றவுள்ள படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல இயக்குனர்களிடம் ரஜினி கதைக் கேட்டு வந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுந்தர் சியிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் வாய்ப்பை சுந்தர் சி பெற்றது பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தான் இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இதுவரை எடுக்கப்பட்ட ஒன்றரை மணிநேரக் காட்சிகளை ரஜினியிடம் காட்டியுள்ளார். அதைப் பார்த்து கவரப்பட்ட ரஜினி, அதன் பிறகே தனது அடுத்தப் படத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.