இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு செல்லும் ஜான்வி கபூரின் படம்!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (09:06 IST)
உலகளவில் சினிமாவுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர். அது அமெரிக்காவில் உருவாகும் ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும் அதை உலகளவில் சினிமா ரசிகர்களும் திரைத்துறையினரும் உற்று கவனிக்கின்றனர். அதில் வெளிநாட்டு சினிமா என்ற ஒரே ஒரு பிரிவில் வேற்று நாட்டைச் சேர்ந்த படங்களுக்கு விருதளிக்கப்படுகிறது.

அந்த விருதை இதுவரை எந்தவொரு இந்திய படமும் பெற்றதில்லை. அமீர்கானின் ‘லகான்’ திரைப்படம் இறுதி சுற்றுவரை சென்று வெளியேறியது. அதன் பிறகு வெற்றிமாறனின் ‘விசாரணை’, வினோத் ராஜின் ‘கூழாங்கல்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கருக்கு சென்றன. ஆனால் அவையெதுவும் இறுதிசுற்றுவரை செல்லவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் மற்றும் விஷால் தேஜ்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படம் வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பணத்திற்காக ஹிஜாப் அணிந்தாரா தீபிகா படுகோன்.. போலி ஃபெமினிசம் என குற்றச்சாட்டு..!

ராஷி கண்ணா கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

க்ரீத்தி ஷெட்டியின் அழகியப் புகைப்படத் தொகுப்பு!

ஏன் ‘பைசன்’தான் என் முதல் படம் என்று சொல்கிறேன்?… துருவ் விக்ரம் சொல்லும் காரணம்!

துல்கரைத் தொடர்ந்து மம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments