தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. கடந்த ஒன்றாம் தேதி இந்தி பட இயக்குனர் ராஜு நெடிமொருவை சமந்தா திருமணம் செய்து கொண்டார். ராஜூவும் சமந்தாவும் கடந்த சில மாதங்களாக டேட்டிங் செய்து வந்திருந்த நிலையில் இவர்களுடைய திருமணம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மிகவும் எளிமையாக சமந்தாவின் திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழில் பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார் சமந்தா.
அதுதான் அவர் நடித்த முதல் திரைப்படம். இருந்தாலும் ஹீரோயினாக பாணா காத்தாடி திரைப்படத்தில் அறிமுகமானார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா திருமணமான நான்காண்டுகளில் நாக சைதன்யாவை விட்டு பிரிந்தார்.
2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாகரத்து ஆனதும் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமந்தா படங்களில் கவனம் செலுத்தி வந்திருந்த நிலையில் ஹிந்தி பட இயக்குனர் ராஜு நெடிமொருவுடன் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாற தற்போது திருமணத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் சமந்தாவின் திருமணத்தில் அனைவர் கண்ணையும் பறித்தது சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம். டைமண்ட் மெட்டலால் ஆன அந்த மோதிரத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி என்று சொல்லப்படுகிறது. அதை காட்டும் விதமாகத்தான் சமந்தா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருப்பார்.