இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் எந்தவொரு முன்னணி நடிகரின் படமும் ரிலீஸாகவில்லை. அதனால் இளம் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்கள் ரிலீஸாகின. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு டியூட், பைசன் மற்றும் டீசல் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின.
இதில் ட்யூட் பிளாக்பஸ்டர் ஹிட்டாகவும், பைசன் சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தன. ஆனால் டீசல் படம் இந்த இரண்டு படங்களுக்கு நடுவே காணாமல் போனது. ஒட்டுமொத்தமாக அந்த படம் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான டீசல் திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இந்நிலையில் டீசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா முக்கிய வேடங்களில் நடிக்க ஷண்முகம் முத்துசாமி இயக்கியிருந்தார். SP சினிமாஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்தது.