ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
இதையடுத்து அவர் நடிப்பில் நீண்டகாலமாக உருவாக்கத்தில் இருந்த டீசல் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது. டீசல் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். அதுல்யா ரவிக் கதாநாயகியாக நடித்துள்ளார். SP பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் படம் குறித்து சமீபத்தில் பேசியுள்ள ஹரிஷ் கல்யாண் “என் தயாரிப்பாளரிடம் ஒருவர் தீபாவளிக்கு ரிலீஸாக உங்கள் படத்துக்கு என்ன தகுதி உள்ளது எனக் கேட்டுள்ளார்? பெரிய ஹீரோ இருக்காரா? இல்ல பெரிய இயக்குனர் இருக்காரா? எனக் கேட்டுள்ளார். ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸாக என்ன தகுதி வேண்டும்? ஒரு நல்ல படம், நல்ல குழு இருந்தால் போதாதா? அந்த நம்பிக்கையோடதான் டீசல் படத்த ரிலீஸ் பண்ணுகிறோம்” எனக் கூறியுள்ளார்.