Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

Advertiesment
கங்கை அமரன்

vinoth

, வியாழன், 27 நவம்பர் 2025 (10:38 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், இயக்குனர் என பல துறைகளில் சாதித்தவர் கங்கை அமரன். அவரது மகன்களாக வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் தற்போது சினிமாவில் பிரபலங்களாக உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விடைபெற்று சென்ற போது அவரைப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து சில கேள்விகளைக் கேட்டனர். அப்போது அவருக்கு பின்னால் சிலர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதனால் எரிச்சல் அடைந்த கங்கை அமரன் அவரை அவமானப்படுத்தும் விதமாக “நீங்க வேணாப் பேசுங்களேன்” என நக்கலடித்தார்.

அந்த சம்பவத்தை அடுத்து இணையத்தில் கங்கை அமரன் மேல் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து அதற்கு இப்போது விளக்கம் அளித்துள்ளார் அமரன். அதில் “நான் அந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்ட சோர்வில் வந்த போது அந்த சம்பவம் நடந்தது. அந்த நபர் கேமராவைப் பார்த்து குதூகலித்தபடி நின்றார். அது என்னைப் பாதிக்குமா இல்லையா? அதை புரிந்து கொள்ளாமல் என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே?” எனப் பேசியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !