நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யை விமர்சித்து வீடியோக்களை பதிவிட்ட யூடியூபர் கிரண் புரூஸ் என்பவர் சென்னை ஆவடியில் நான்கு நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரண் புரூஸ் ஒரு திரையரங்கிற்கு சென்றபோது, பாலகிருஷ்ணன், தனுஷ் உட்பட நான்கு பேர் அவரை வழிமறித்து, வீடியோக்கள் குறித்து மிரட்டல் விடுத்ததாக அவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், பாலகிருஷ்ணன், தனுஷ், அசோக், மற்றும் பார்த்தசாரதி ஆகிய நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை விமர்சிக்கும் வகையில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.