ஹாலிவுட்டின் பிரபல ஸ்டியோக்களில் ஒன்று வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனத்தின் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இந்த ஓடிடி தளத்தோடு ஒப்பந்தத்தில் இருக்கும் HBO நிறுவனம் இம்மாத இறுதியோடு வெளியேற உள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மார்ச் 31 முதல் இந்தியாவில் HBO உள்ளடக்கத்தை கொண்டிருக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எச்பிஓ நிகழ்ச்சிகளான தி லாஸ்ட் ஆஃப் அஸ் மற்றும் மிகவும் வெற்றிகரமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆகியவை ஸ்ட்ரீமிங் தளத்திலிருந்து நகர்த்தப்படும். மேலும் பல்லாயிரக்கணக்கான HBO தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சிகள் பார்வைக்குக் கிடைக்காது எனவும் சொல்லப்படுகிறது. இதனால் பெருமளவில் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என சொல்லப்படுகிறது.