Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் ஹாலிவுட் பட வாய்ப்பு… ராம்சரண் பகிர்ந்த தகவல்!

விரைவில் ஹாலிவுட் பட வாய்ப்பு… ராம்சரண் பகிர்ந்த தகவல்!
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (08:49 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து  2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது.

இந்நிலையில் இந்த படத்தின் பரமோஷனுக்காக ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் இப்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ராம்சரண் விரைவில் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இதுபற்றி தற்போது பேசியுள்ள ராம்சரண் “சில முன்னணி இயக்குனர்களிடம் இது சம்மந்தமாக பேசி வருகிறேன்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் தம்பிக்கு இந்த படம் இன்னொரு பாய்ச்சல்… அயோத்தி படம் பார்த்து பாராட்டிய சீமான்!