Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு மேலும் 4 பிரிவுகளில் விருது! படக்குழு மகிழ்ச்சி

rrr
, சனி, 25 பிப்ரவரி 2023 (16:19 IST)
அமெரிக்காவில் நடைபெற்று வரும் திரைப்பட விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர் படம் 4 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.
 

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து  2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.

ஆனால், இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினியல் பாடல் பிரிவில் இப்படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் தகுதிபெற்று, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் இடம்பெற்ற  நாட்டுக் குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றது.

இப்படத்திற்கு விருதுகள் விருதுகள் கிடைத்து வரும் நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் திரைப்பட விருது விழாவில் சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம் சண்டைக் காட்சிகள், சிறந்த பாடல் என 4 பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளது.

இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'துருவ நட்சத்திரம்' பட புதிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்