நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது அவரது படங்களுக்குப் பெரியளவில் வரவேற்பு இல்லாததால் மற்ற ஹீரோக்களோடு இணைந்து நடிக்கவும் தயாராகிவிட்டார். ஏற்கனவே அஜித் மற்றும் சிம்புவுடன் அவர் இணைந்து நடிக்க ஒப்பந்தமான நிலையில் அந்த இரு படங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆர்யாவோடு அவர் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது பற்றி பேசியுள்ள ஆர்யா “நானும் சந்தானமும் இணைந்து நடிக்க மூன்று திரைக்கதைகளைக் கேட்டுள்ளோம். விரைவில் நாங்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்போம். அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கலாம்.” எனக் கூறியுள்ளார்.