அதர்வா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு "இதயம் முரளி" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பான தயாரிப்பாளராக இருக்கும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்குகிறார்.
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன், நிஹாரிகா, ரக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சாய் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முக்கியக் காட்சிகள் தற்போது அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட இருமடங்கு அதிகமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. படத்தைத் தொடங்கும் போது 20 கோடி ரூபாய் என திட்டமிட்டபட்ட பட்ஜெட் தற்போது 40 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இது அதர்வாவின் மார்க்கெட்டை விட மிக அதிகம்.